விஜய் ஆனந்த் , தஞ்சையில் பிறந்து வடமட்டம் என்னும் கிராமத்தில் வளர்ந்து கும்பகோணத்தில் க்ரைஸ்ட் தி கிங் மெட்ரிக் பள்ளியிலும், ஏ.ஆர்.ஆர்.மெட்ரிக் பள்ளியிலும் பள்ளிக்கல்வியினை முடித்து, பின் IFET பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பினை முடித்து, தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 2003-2008 வரை பணியாற்றியுள்ளார். இடைப்பட்டக் காலத்திலேயே தனது M.Tech படிப்பினை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் முடித்தார். பிறகு 2009-இல் சென்னை S.R.M. பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக தன் பணியை தொடங்கி, இன்று வரை தனது பணியை தொடர்ந்துகொண்டிருக்கின்றார்.